அச்சுப்பிரதி தேவையானவர்கள் இங்கே உங்கள் விவரத்தை பதியவும்

ஆசிரியரிடமிருந்து..

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ்க் குழந்தைகளுக்கும் வலைத்தமிழ் மொட்டு ஆசிரியர் குழுவின் சார்பாக என் அன்பு வணக்கங்கள். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு பன்னாட்டு மாத இதழ் உயிர் பெற்று, உருவம் பெற்று உங்கள் கைகளில் தவழ வந்துள்ளது. தமிழர்களாகிய நாம் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற கணியன் பூங்குன்றனின் புறநானூற்றுப் பாடலுக்கிணங்க, பரந்து விரிந்த இந்த பூகோளத்தின் அணைத்து இடங்களிலும் பரவி , அனைவரிடமும் அன்பு பாராட்டி, தொன்மை தமிழ்க்குடிகளின் பண்பாட்டை பறைசாற்றி, நம் வருங்கால இளைய தலைமுறைக்கு நம் தமிழ் மொழியை சுவைத் ததும்ப சொல்லிக்கொடுத்து ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை வார்த்தெடுக்க முயன்று வருகின்றோம். உலகில் எங்கு சென்றாலும் நம் குழந்தைகளின் கல்வி , கலை, விளையாட்டு, தமிழ் கற்கும் ஆர்வம் போன்றவை பாராட்டுதலுக்கும் , போற்றுதலுக்கும் உரியது.

வலைத்தமிழ் குழுமம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எம் குழந்தைகள் தமிழிருக்க ஏன் ஆங்கிலப்பாடலைக் கொண்டு பிறந்தநாள் கொண்டாடவேண்டும் என்று கருதி, “நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்” என்ற புகழ் வாய்ந்த தமிழ் பிறந்த நாள் பாடலை பாவலர் திரு. அறிவுமதி அவர்களின் வரியில் வெளியிட்டு உலகெங்கும் வாழும் மழலைச் செல்வங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. இப்பாடல், இன்று தமிழக அரசின் பாடத்திட்டத்திலும், அமெரிக்கத் தமிழ் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள், சிறுவர் கதை சொல்லிக் குழு, திருக்குறள் செயலி, மரபு விளையாட்டுகளை தொகுத்தல், தமிழிசைப் பயிற்சி , கோடைகால தமிழ்ப் பயிற்சிப் பட்டறை, தமிழ்க்கல்வி என்ற பல பரிமாணங்களில் வலைத்தமிழ் இணையம் தமிழ் குழந்தைகள் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை முன்னெடுத்துவருகிறது.

இதைத் தொடர்ந்து, உங்கள் அனைவருக்கும் பிடித்த வகையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து, திருக்குறள், சுவையான சுட்டிக் கதைகள், சிறுவர் பாடல், தாத்தா பாட்டிக்குக் கடிதம், கணக்கதிகாரம், தமிழ்க் குறுக்கெழுத்து விளையாட்டு, சிறுவர்களின் ஓவியங்கள், பழமொழி, சொலவடை, மரபு விளையாட்டு, நா பிறழ் பயிற்சி, சொல் விளையாட்டு, எழுத்து விளையாட்டு, விடுகதை, தமிழின் தொன்மை சார்ந்த பல தகவல்களை உள்ளடக்கி இந்த இதழை ஒரு பன்னாட்டு மாத இதழாக உங்கள் கோடை விடுமுறை நேரத்தில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து தமிழ் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இவ்விதழ் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன். இந்த இதழில் எது பிடிக்கிறது, எது மேலும் சிறப்பாக கவனம் செலுத்தவேண்டும் என்ற உங்கள் பார்வையை, mottu@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி எங்களுடன் கரம் கோர்த்து வலைத்தமிழ் மொட்டு ஆசிரியர் குழுவிற்கு உங்கள் நல் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வலைத்தமிழ் மொட்டு வெளிவர நம் அடுத்த தலைமுறைக்கு மொழியைக் கடத்தும் சீரிய பணியை கவனத்தில் கொண்டு கடுமையாக உழைத்த அனைத்து ஆசிரியர் குழு உறுப்பினர்களுக்கும், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த வலைத்தமிழ் நிர்வாகத்திற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் அடுத்த மொட்டில் சந்திப்போம்.

முதன்மை ஆசிரியர்
செந்தில்நாதன் இராதாகிருட்டிணன்
மிசெளரி, அமெரிக்கா

ஆசிரியர் குழு

முதன்மை ஆசிரியர்

செந்தில்நாதன் இராதாகிருட்டிணன்

மிசெளரி, அமெரிக்கா

துணை ஆசிரியர்

கார்த்திகை பிரியா கோவிந்தராஜன்

மாசசூசெட்ஸ், அமெரிக்கா

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

வெர்ஜினியா, அமெரிக்கா

குருபிரசாத் விஜயராவ்

வாசிங்டன், அமெரிக்கா

பிரவீணா இராமரத்தினம்

மிச்சிகன், அமெரிக்கா

சத்யா நடராஜன்

கலிபோர்னியா, அமெரிக்கா

கவிதா ராம்கி

ஜார்ஜியா, அமெரிக்கா

சரவணன் ஸ்ரீதர்

வாசிங்டன், அமெரிக்கா

ஜெய்சங்கர்

டெக்சாஸ், அமெரிக்கா

தனா சிவப்பிரகாசம்

நியூஜெர்சி, அமெரிக்கா

சுபத்ரா சிவராம்

நியூயார்க், அமெரிக்கா

வாசகர் கருத்துகள்

முதல் கருத்து உங்கள் கருத்தாக இருக்கட்டும்...

உங்கள் கருத்துகள் பதிவு செய்ய

வலைத்தமிழ் மொட்டு இதழ் அச்சுப்பிரதி தேவையானவர்கள் இங்கே உங்கள் விவரத்தை பதியவும்.