அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவி யற்றவரென்று சொல்லப்படுவார் அதற்கேதுவாகிய அவாவற்றவரேயாவர்; மற்றையார் அற்றாக அற்றது இலர் - அவா மு ற் று ம் அறாது சில பொருள்களின் மேல் மட்டும் ஆசையற்றவர் அவற்றால்வருந் துன்பங்களற்றதல்லது பிறவியற்றவ ராகார்.
இதனால் அவாவறுத்தலின் சிறப்பு உடன்பாட்டு முகத்தாலும் எதிர்மறை முகத்தாலுங் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர்,
தூய துறவியாக மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.
பிறவியற்றவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அதற்கு நேர்க்காரணமான அவா அற்றவர்களாவர். மற்ற எல்லாம் நீங்கி அது ஒன்று மட்டும் நீங்காதவர்கள் சில துன்பங்கள் அற்றவர்களேயல்லாமல் பிறவி அற்றவர்களாகார்.
Translation
Men freed from bonds of strong desire are free;
None other share such perfect liberty.
Explanation
They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.