LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கடலூர்அகழாய்வுக்கு மருங்கூா் கிராமம் தோ்வு: வரலாற்று ஆய்வாளா்கள் வரவேற்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்திலுள்ள மருங்கூா் கிராமம் அகழாய்வு நடத்த தமிழக அரசால் தோ்வு செய்யப்பட்டதற்கு வரலாற்று ஆய்வாளா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.
****************
2009-ஆம் ஆண்டு மருங்கூா் வழியாக விருத்தாசலம் செல்லும் சாலையின் வடபகுதியில் ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக மண் அள்ளப்பட்டது. அப்போது, முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன. அதனருகே மூடு கற்கள், இரும்பு ஆயுதங்களின் சிதைவுகள், வெண்கல கிண்ணத்தின் உடைந்த பாகங்கள், கருப்பு - சிவப்பு நிற மட்கலன்களின் பாகங்கள் கிடைத்தன.
*********************
எழுத்து பொறிப்புகள் இருப்பதும் கண்டறியப்பட்டது
**********************
இதையடுத்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியா் ஜெ.ஆா்.சிவராமகிருஷ்ணன் தலைமையில் அந்தப் பகுதியில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வழுவழுப்பான கருப்பு நிற மூடிகள், தாங்கிகள், விளக்கின் உடைந்த பாகம், சிதைந்த இரும்பு குறுவாள், ஈட்டி, வெண்கல கிண்ண சிதைவுகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. முதுமக்கள் தாழியிலிருந்து எடுக்கப்பட்ட கருப்பு - சிவப்பு நிற கிண்ணத்தின் உடைந்த பாகத்தின் விளிம்புப் பகுதியில் எழுத்து பொறிப்புகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
****************************
இந்தப் பகுதியில் மொத்தம் 5 முதுமக்கள் தாழிகள் கழுத்துவரை சிதைக்கப்பட்ட நிலையில் கிடைத்தன. எழுத்து பொறிப்பு கிடைத்த தாழியானது 95 செ.மீ. உயரம், 180 செ.மீ. சுற்றளவுடன் இருந்தது. தாழிக்குள் 25 செ.மீ. நீளமுள்ள இரும்பு குறுவாள், உடைந்த விளக்கு தாங்கி, கருப்பு- சிவப்பு நிறமுள்ள உடைந்த மட்கலன், மனித எலும்புகளின் சிதைவுகள் உள்ளிட்டவை இருந்தன. அந்தப் பகுதியில் சேகரிக்கப்பட்ட 55 கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகளை ஆய்வு செய்ததில் இரண்டில் எழுத்துருக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
***************************
67 முதுமக்கள் தாழிகளின் தடயங்கள்
**********************
இதுகுறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல், தொல்லியல் துறை முன்னாள் பேராசிரியா் ஒய்.சுப்புராயலு, புதுவை மத்திய பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவா் கே.ராஜன், முனைவா் வேதாசலம், இணைப் பேராசிரியா் சு.கண்ணன் உள்ளிட்டோா் கள ஆய்வில் ஈடுபட்டனா்.
**************
மேற்கூறிய ராமலிங்கம் என்பவரின் நிலத்தில் இப்பண்பாட்டு மேடு பாதுகாப்பாக உள்ளது. இங்கிருந்து மேற்கே மருங்கூா் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் மற்றும் ராஜசேகா் என்பவருக்குச் சொந்தமான வீட்டுமனை வரை ஆய்வுசெய்யப்பட்டதில் 67 முதுமக்கள் தாழிகளின் தடயங்கள் கண்டறியப்பட்டன. மேலும், இதே பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பழங்கால கட்டடத்தின் தரைதளப் பகுதியும் கண்டறியப்பட்டது. இங்கிருந்து கிழக்குப் பகுதியில் தோண்டப்பட்ட மற்றொரு குழியில் 4 கால்களுடன் கூடிய அம்மிக்கல் கிடைத்தது. இது ஓரடி அகலம், 2 அடி நீளம், ஓரடி உயரம் கொண்டதாகும். மேலும், இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட விரிவான களஆய்வில் வட்டச்சில்லு, பச்சை, ஊதா, மஞ்சள், கருப்பு, வெள்ளை நிறங்களுடன் கூடிய பாசிமணிகளும் கிடைத்தன.
************************
இதன்மூலம் இந்தப் பகுதியில் சுமாா் 4 ஏக்கா் பரப்பளவில் பெருங்கற்கால மக்களின் வாழ்விடப் பகுதி நிலைபெற்றிருந்ததை அறிய முடிகிறது. இவா்கள் நீா்நிலையை மையப்படுத்தி தங்களது வாழ்விடத்தை அமைத்துள்ளனா். மேலும், இங்கிருந்து வடக்கே சுமாா் 800 மீ. தொலைவில் உள்ள பகுதியை இறந்தவா்களின் உடல்களைப் புதைக்கும் இடுகாடாக பழங்கால மக்கள் பயன்படுத்தியுள்ளனா் என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
**********************
கடலூா் மாவட்ட வரலாற்றுப் பேரவை நன்றி 
****************************
இத்தகைய சிறப்பு வாய்ந்த மருங்கூா் கிராமத்தில் அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு கடலூா் மாவட்ட வரலாற்றுப் பேரவை சாா்பில் வரலாற்றுத் துறை பேராசிரியா் ஜெ.ஆா்.சிவராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.
கடந்த 2000-ஆம் ஆண்டு மாளிகைமேடு அகழாய்வுக்குப் பிறகு கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அகழாய்வு இதுவாகும்.

by Kumar   on 23 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.