LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழறிஞர்கள் Print Friendly and PDF

பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் ராஜகிரியில், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாபநாசம் வட்டம் ராஜ கிரியைச் சேர்ந்த தர்மராஜ், தனது வயலில் கல்வெட்டு கிடப்பதாக அளித்த தகவலின்பேரில், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி மாறன், பொந்தியாகும் அரசு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் அங்குச் சென்று கல்வெட்டை ஆய்வு செய்தனர்.

 

இதுகுறித்து அவர்கள் கூறியது: முதலாம் ஆதித்த சோழனின் பட்டப் பெயர் இராசகேசரி. இவரது பெயராலேயே இந்த ஊர் இராச கேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப் போக்கில் பெயர் மருவி, தற்போது இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

 

காவிரியின் தென்கரை தலங்களான கோவில்தேவராயன் பேட்டை மச்சபுரீஸ்வரர் கோயில், திருப்பாலைத்துறை பாலைவன நாதர் கோயில், நல்லூர் கோயில் ஆகியவை இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தைத் தலைமையிடமாகக் கொண்டே இயங்கி வந்துள்ளன.

 

தற்போது இங்குக் கண்டெடுக்கப்பட்ட 4 துண்டு கல்வெட்டுகள், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால எழுத்தமைதியுடன் காணப்படுகின்றன. 4 துண்டு கல்வெட்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு அற்றவையாக இருப்பதுடன், முழுமையாகவும் இல்லை. இராசேந்திர சோழன், விண்ணகரம் என்ற கோயிலுக்கு நிலக்கொடை வழங்கியதைப் பற்றியதாக இக்கல்வெட்டு இருக்கலாம் என அறியமுடிகிறது.

 

 

அதில் உள்ள வாசகங்களில் மங்கலம், பிறவி கலாஞ்சேரி, கலா கரச்சேரி போன்ற இடங்களின் பெயர்களும், நக்கன் நித்தவிநோதகன், கண்டன், மும்மடி சோழ சோழவரையன் போன்ற பெயர்களும், மணல் பெறும்வரை, ஆதித்த வதி, கண்டன் வாய்க்கால் என்ற வாய்க்கால்களின் பெயர்களும், நில எல்லை, மா, குழி, விலை ஆவணம் போன்ற நில அளவு குறித்த சொற்களும் காணப்படுகின்றன.

 

சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்த வதி, கண்டன் வாய்க்கால் போன்ற நீர்நிலைகளின் பெயர்களும், கலா கரச்சேரி என்ற வாழ்விடப் பகுதியும் குறிக்கப் பெற்றுள்ளன என்றனர்.

by Kumar   on 23 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜவ்வாதுமலையில் பிற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு. ஜவ்வாதுமலையில் பிற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு.
வீரமாமுனிவர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர். வீரமாமுனிவர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.