LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - பகுதி 2 -டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு-உலகமொழிகளில் திருக்குறள், உண்மை நிலை என்ன?

எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - பகுதி 2 -டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு-உலகமொழிகளில் திருக்குறள், உண்மை நிலை என்ன?

அறிமுகம்:

    டாக்டர் என்.வி. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் பல மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை தன் வலைத்தளத்தில் ஒன்றாகப் பதிவுசெய்துள்ளார். இவ்வாறு பதிவேற்றம் செய்யும்போது தனக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் அனுபவங்களையும் பதிவுசெய்துள்ளார். மேலும் எதிர்பாரா உதவிகளும் ஊக்கங்களும் பாராட்டுகளும் கிடைத்ததை வெளிப்படுத்தியுள்ளார். இவர் வெளிநாடுகளுக்குச் சென்று குறிப்பிட்ட மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு உள்ளதா என்பதை அறிய சில வழிமுறைகளைக் கடைப்பிடித்துள்ளார். முதலாவது வெளிநாட்டிலுள்ள தமிழ்ச்சங்களுக்குச் செல்வது, இரண்டாவது அந்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வது ஆகியனவாகும். இதன்மூலம் திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் சார்ந்த உண்மையான, நம்பகமான தகவல்கள் கிடைக்கும் என்று விவரிக்கின்றார். மேலும் இவர் மொழிபெயர்ப்புகளைத் தேடிச் செல்லும் போதே அங்குத் திருக்குறளின் நிலையையும் அதனுடைய பயன்பாட்டினையும் அறிந்துகொள்கின்றார். சில பழமைவாய்ந்த முக்கியமான மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் இல்லை என்பதையும் குறிப்பாகக் கிரேக்கம், ஹீப்ரு போன்ற தொன்மையான மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் இல்லை என்பதைக் கூறுகின்றார். உலக மொழிகளின் இலக்கியங்கள் பலவற்றுடனும் திருக்குறள் ஒற்றுமைப்பண்பு உடையதாக உள்ளது. எனவே பன்மொழி இலக்கியங்களுடன் திருக்குறளை ஒப்புமைப்படுத்தவேண்டும் என்று அஷ்ராஃப் கூறுகின்றார்.

திருக்குறள் மொழிபெயர்ப்புகள்:

    அஷ்ராஃப் தாம் இதுவரை அறிந்த திருக்குறள் மொழிபெயர்ப்புகளை இந்திய மொழிபெயர்ப்புகள், ஆசிய மொழிபெயர்ப்புகள் மற்றும் ஐரோப்பிய மொழிபெயர்ப்புகள் என மூன்றாகப் பிரித்துள்ளார். அதன்படி இந்தியாவில் 14 மொழிகளிலும் ஆசியக்கண்டத்தில் 12 மொழிகளிலும் ஐரோப்பியக்கண்டத்தில் 14 மொழிகளிலும் என மொத்தம் 40 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளதை அஷ்ராஃப் கண்டறிந்துள்ளார்.

ஐரோப்பிய மொழிகள்:

    ஐரோப்பிய மொழிகளில் பலவற்றில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஸ்வீடிஷ் மொழியினைக் கூறலாம். இம்மொழியில் 1971 ஆம் ஆண்டு திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதுவரை ஸ்வீடிஷ் மொழியில் ஒரு மொழிபெயர்ப்பு மட்டுமே உள்ளது. இதனைப்போலவே பர்மீஷ், ஸ்பானிஷ், தாய், டச்சு போன்ற மொழிகளிலும் ஒரு மொழிபெயர்ப்பு மட்டுமே உள்ளது. அடுத்ததாக போலிஷ் மொழியில் 2 மொழிபெயர்ப்புகள் உள்ளன. 1958 ல் உமாதேவி, வான்டி போன்றோர் இணைந்து முதுல் மொழிபெயர்ப்பினைச் செய்துள்ளனர். அடுத்து 1977, 1998 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் மொழிபெயர்ப்பினை போடன் என்பவர் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அடுத்ததாக ரஷ்ய மொழியினைக் காணும்போது அம்மொழியில் 4 மொழிபெயர்ப்புகள் உருவாகியுள்ளன. மேலும் ஜெர்மன் மொழியினைக் கூறும்போது அதில் 7 மொழிபெயர்ப்புகள் திருக்குறளில் உருவாகியுள்ளன.     அடுத்ததாகப் பிரெஞ்சு மொழியில் 14 மொழிபெயர்ப்புகள் தோன்றியுள்ளன. ஆங்கிலத்திற்கு அடுத்ததாகப் பிரெஞ்சு மொழியிலேயே அதிக திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளதைக் காணலாம். இறுதியாக ஆங்கில மொழியைக் கூறலாம். நூற்றுக்கும் மேற்பட்ட திருக்குறள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் தோன்றியுள்ளன. 1794 முதல் 2016 வரை தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகள் நடந்தவண்ணம் உள்ளன. உலகிலேயே அதிக திருக்குறள் மொழிபெயர்ப்புகளைக் கொண்டுள்ள மொழி ஆங்கிலம் ஆகும்.

ஆசிய மொழிகள்:

    ஆசிய மொழிகள் பலவற்றுள்ளும் திருக்குறள் மொழிபெயர்ப்பினைக் காணமுடியும். முதலாவதாக பிஜியன் மொழியைக் காணலாம். இம்மொழியில் 2 மொழிபெயர்ப்புகள் உள்ளன. சாமுவேல் பெர்விக் மற்றும் பால் கெராக்டி ஆகியோர் இவற்றைச் செய்துள்ளனர். அடுத்ததாக மலாய மொழியினை முக்கியமாகக் கூறலாம். இம்மொழியில் 5 திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளன. மேலும் ஜப்பானிய மொழியில் 1980 மற்றும் 1999 - ல் 2 மொழிபெயர்ப்புகள் உருவாகியுள்ளன. அடுத்ததாகச் சீன மொழியில் 2 மொழிபெயர்ப்புகளைக் காணலாம். 1967 மற்றும் 2015 ல் இம்மொழிபெயர்ப்புகள் தோன்றியுள்ளன. இதில் இரண்டாம் மொழிபெயர்ப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அரபு மொழியிலும் 2 திருக்குறள் மொழிபெயர்ப்புகளைக் காணலாம். 1980 ல் யூசுப் கோகான் என்பவராலும் 2013 ல் ஜாகிர் உசேன் என்பவராலும் இம்மொழிபெயர்ப்புகள் ஆக்கம் பெற்றுள்ளன.

இந்திய மொழிகள்:

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் தோன்றியுள்ளன. அவற்றுள் கொங்கனி மொழியில் 2 மொழிபெயர்ப்புகள், மராத்தி மொழியில் 2 மொழிபெயர்ப்புகள், ஒடியா மொழியில் 5 மொழிபெயர்ப்புகள், வங்காள மொழியில் 5 மொழிபெயர்ப்புகள், இந்தி மொழியில் 20 மொழிபெயர்ப்புகள், குஜராத்தி மொழியில் 3 மொழிபெயர்ப்புகள், பஞ்சாபி மற்றும் மனிப்பூரி மொழிகளில் 2 மொழிபெயர்ப்புகள், உருது மொழியில் 2 மொழிபெயர்ப்புகள் என பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளன. இந்திய மொழிகளில் மலையாள மொழியிலேயே அதிக திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளன. கிட்டத்தட்ட 25 மொழிபெயர்ப்புகள் மலையாளத்தில் உள்ளன. 1595 முதல் 2007 வரை மலையாளத்தில் மொழிபெயர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அடுத்ததாகக் கன்னட மொழியில் 9 மொழிபெயர்ப்புகளும் தெலுங்கில் 20 மொழிபெயர்ப்புகளும் உள்ளன.

    இவற்றுள் சிறந்த மொழிபெயர்ப்புகளை மட்டும் ஒரு மொழிக்கு ஒரு மொழிபெயர்ப்பாகத் தேர்வு செய்து அஷ்ராஃப் தனது வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். அனைவரையும் திருக்குறள் சென்றடைய வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இத்தகைய மேம்பட்ட பணியை அஷ்ராஃப் செய்துள்ளது பாராட்டத்தக்கதாகும். 30 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை இணையத்தில் பதிவிட வேண்டும் என்பது அஷ்ராஃப்பின் இலக்காக உள்ளது. இவருடைய சேவை மேன்மேலும் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.

by Lakshmi G   on 26 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.