LOGO

பத்திரகாளி - மடப்புரம்

  கோயில்   பத்திரகாளி - மடப்புரம்
  கோயில் வகை   குலதெய்வம் கோயில்கள்
  மூலவர்   பத்திரகாளி
  பழமை   
  முகவரி
  ஊர்   மடப்புரம்
  மாவட்டம்   மதுரை [ Madurai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

முன்னுரை: 

முன்னுரை: 
பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்கு இறைவனின் திருவடிகளே தெப்பமாய் அமைகின்றன 
என மக ;கள் நம்புகின்றனர். அவ்வகையில் தமிழக மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள ; 
ஏராளம். “பெருந்தெய்வங்கள், சிறுதெய்வங்கள், அம்மன் கோவில்கள், ஊர்ப் 
பொதுக்கோவில்கள், குடும்பக் கோவில்கள், தெருக்கோவில்கள், சிறுதேவதைகளை வழிபடும் 
கோவில்கள், சாஸ்தா கோவில்கள் ஆகியன தமிழ்நாட்டில் குறிப்பாகத ; தென்மாவட்;டங்களில் 
மிகுதியாகக் காணப்படுகின்றன(1)
”. இவற்றுள் “சமூகத்தின் அடித ;தளத ;து மக ;கள் வழிபடும் 
கடவுளரைச் சிறுதெய்வங்கள் என்றும், மேல ;தளத்து மக ;கள் வழிபடும் தெய்வங்களைப் 
பெருந்தெய ;வங்கள் எனவும ; குறிப்பிடும் வழக்கம ; அக்காலத ;திலேயே இருந்தது(2)
” எனத ; 
தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். இதையே ஆ.சிவசுப்பிரமணியன், “நிறுவனச் சமயத ;திற ;குள் 
அடங்கும் சைவ, வைணவச் சமயங ;களில் இடம்பெறும் தெய்வங்களைப் பெருந்தெய ;வம் என்றும ;, 
ஏனைய தெய்வங்களைச் சிறுதெய்வங்கள்(3)
” என்றும ; அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். 
சமூகத்தின் அடித ;தள மக ;கள் வணங்கும் மாடன், காடன், காளி, மாரி போன்ற தெய்வங்கள ; 
சிறுதெய்வங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிறுதெய்வங்களுள் ஒன்றான பத ;திரகாளியம்மனை 
மையமாக வைத்து, மடப்புரம் பகுதி மக ;களாகிய நாங்கள் வழிபடும் பத ;திரகாளியம்மனின ; 
கோவில் சிறப ;புக்களையும், வழிபாட்டு முறைகளையும், பண ;பாட்டுப் பதிவுகளையும் இக்கட்டுரை 
விளக்குவதாக அமைகிறது. 
குலதெய்வம ; - விளக்கம்: 
ஒரு குலத்தின் தெய்வம் குலதெய்வமாகும். குலம் என்பது சாதி என்னும் பொருளையும் 
குறிக்கின்றது. குலதெய்வமென்பது அந்தச் சாதியினருள்ளும் குறிப்பிட்ட குழு அல்லது குறிப்பிட்ட 
குடும ;பம் வாழையடி வாழையாகத் தாங்கள் வணங ;குகின்ற தெய்வத்தைக் குறிக்கின்றது. குலம் 
என்பது முன்னோர் ஒருவரின் வழித்தோன்றி ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள பலவகையான 
2
குழுக்களாகும். இனத ;தின் உட்பிரிவுதான் குலம். அந்த வகையில் மடப்புரம் பகுதியில் வாழ்கின்ற மக்களாகிய எங்களின் குலதெய்வமாக விளங்குவது பத்திரகாளி அம்மன் ஆகும

பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்கு இறைவனின் திருவடிகளே தெப்பமாய் அமைகின்றன என மக்கள் நம்புகின்றனர். அவ்வகையில் தமிழக மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் ஏராளம். “பெருந்தெய்வங்கள், சிறுதெய்வங்கள், அம்மன் கோவில்கள், ஊர்ப் பொதுக்கோவில்கள், குடும்பக் கோவில்கள், தெருக்கோவில்கள், சிறுதேவதைகளை வழிபடும் கோவில்கள், சாஸ்தா கோவில்கள் ஆகியன தமிழ்நாட்டில் குறிப்பாகத் தென்மாவட்டங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

குலதெய்வம் - விளக்கம்: 

ஒரு குலத்தின் தெய்வம் குலதெய்வமாகும். குலம் என்பது முன்னோர் ஒருவரின் வழித்தோன்றி ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள பலவகையான குழுக்களாகும். அந்த வகையில் மடப்புரம் பகுதியில் வாழ்கின்ற மக்களாகிய எங்களின் குலதெய்வமாக விளங்குவது பத்திரகாளி அம்மன் ஆகும்.

பண்பாடு அறிமுகம்: 

பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இது பொதுவாக, மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயல்பாடுகளுக்கான சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புகளையும் குறிக்கின்றது. 

மடப்புரம் தல வரலாறு: 

 பண்டைய காலத்தில் மதுரையைச் சுற்றிலும் வெள்ளம் சுழ்ந்திருந்தது. மதுரையின் எல்லையைக் குறித்துத் தருமாறு சிவபெருமானிடம் மீனாட்சியம்மன் தெரிவித்தார். எல்லையைக் குறிக்கும் வகையில் சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிசேடன் பாம்பை எடுத்து வளைத்து நின்றார். மேற்கே திருவேங்கடமும், தெற்கே திருப்பரங்குன்றமும், வடக்கே திருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தின் படத்தையும் பாம்பின் வாலையும் ஒன்று சேர்த்து எல்லையைக் காட்டினார். 

பாம்பின் தலையும், வாலும் சந்தித்த இடம் "படப்புரம்‟ என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் மருவி "மடப்புரம்‟ என்று ஆனது. இங்கு பார்வதியுடன் சிவபெருமான் வேட்டைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. பார்வதியை ஓரிடத்தில் அமர வைத்து விட்டு, சிவபெருமான் வேட்டைக்குக் கிளம்பினார். அய்யனாரை, பார்வதிக்குப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் சென்றார். வேட்டைக்குச் சென்று திரும்பிய சிவபெருமானிடம், தான் காத்திருந்த இடத்திர்குச் சிறப்பு அளிக்க வேண்டும் என்று பார்வதி கேட்டார். அருகில் உள்ள வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு, காசியில் நீராடியதை காட்டிலும் கூடுதல் புண்ணியம் கிடைக்கும் என்று சிவபெருமானும் வரம் அளித்தார். பின்பு பார்வதி மடப்புரத்திலேயே ஆதிசேடன் வாயில் உள்ள விஷத்தை உண்டு காளி அவதாரம் எடுத்துத் தங்கியதாகவும், அவருக்குப் பாதுகாப்பாக இருந்த அய்யனார் அடைக்கலம் காத்த அய்யனாராக வீற்றிருந்ததாகவும் கோவில் அர்ச்சகர் வழி அறியப்படுகிறது.

சிவபெருமான் பார்வதிக்கு அருளிய வரத்தின்படி தற்போதும் கூட மதுரைக்கு அருகில் உள்ள வைகையாற்றில் இறந்தவர்களுக்கு திதி கொடுத்து பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். காவல் தெய்வமாக அமைந்த அய்யனார் தன் வாகனமாகிய குதிரையை அம்மனுக்கு நிழலாகக் கொடுத்து அடைக்கலம் காத்தார். இதனால் "அடைக்கலம் காத்த அய்யனார்‟ என்று மடப்புரத்தில் உள்ள அய்யனார் பெயர் பெற்றார் என்றும் அறிய முடிகின்றது.

பத்திரகாளியம்மன் வரலாறு: தரிகாசுரன் பிரம்மாவை நினைத்துப் பல ஆண்டு காலமாக கடும் தவம் செய்து வந்தார். அச்சூழலில் பிரம்மன் அங்கு தோன்றி தரிகாசுரனின் தவத்தைப் பாராட்டினார். உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள் என்றார். தரிகாசுரனும் என்னை உலகத்தில் யாராலும் அழிக்க முடியாத வரம் வேண்டும் என்று கேட்டான். அதற்கு பிரம்மா பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்க வேண்டும். எனவே வேறு வரம் கேள் என்று கூறினார். தரிகாசுரனும் சற்று யோசித்துவிட்ட பின்பு, உலகத்தில் ஆண் முகத்தையே பார்க்காமல் பதினாறு வயது நிரம்பிய கன்னிப் பெண்ணால் எனக்கு அழிவு ஏற்படும் வகையில் வரம் தர வேண்டும் என்று கூறினான். பிரம்மாவும் அப்படியே வரம் தந்து மறைந்தார். அதன்பிறகு தரிகாசுரன், உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் என்னையே வணங்க வேண்டும் என்று கொடுமைப்படுத்தினான். இதைப் பார்த்த தேவர்களும், மக்களும் சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா இவர்களிடம் வணங்கி முறையிட்டார்கள். மகாவிஷ்ணுவும் தேவர்களைப் பார்த்து, தரிகாசுரனை அழிக்க யாராலும் முடியாது என்று கூறினார். ஆண் முகத்தைப் பார்க்காமல் வாழ்ந்த பதினாறு வயது கன்னிப் பெண் ஒருவரால் தான் அரக்கனை அழிக்க முடியும் என்று கூறிப் பார்வதியை அழைத்து, குறிஞ்சிக்காட்டில் ஆண் வாடையே இல்லாமல் இருக்கும் பிரம்மராட்சசியின் வளர்ப்புக் குழந்தையாகப் பதினாறு வருடங்கள் வளர்ந்து வர வேண்டும் என்று கூறினார். பதினாறு வருடங்கள் கழித்து தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரவு பன்னிரண்டு மணிக்கு விடியும் முன் சிவன்-பார்வதி திருமணத்தை நடத்தி வைப்பார்கள் என்று கூறி குறிஞ்சிக்காட்டிற்கு அனுப்பி வைத்தார். 

தரிகாசுரனின் அட்டகாசம் அதிகரித்தது. தேவர்களையும் முனிவர்களையும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். பதினாறு வருடங்கள் கழித்து தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள். மகாவிஷ்ணுவும் தேவர்களை அழைத்து, குறிஞ்சி மலைக்காட்டில் பார்வதி வளர்ந்து பதினாறு வருடங்கள் ஆகிவிட்டது. சிவபார்வதி திருமணம் செய்விக்க வேண்டும் என்று கூறி சிவனையும், தேவர்களையும் குறிஞ்சி மலைக்காட்டிற்கு அழைத்துச் சென்றார் பிரம்மா. அதைப் பார்த்த நாரதர் அரக்கன் தரிகாசுரனிடம் சென்று உலகத்திலேயே அழகு வாய்ந்த பெண் குறிஞ்சி மலைக்காட்டில் இருக்கிறாள். அவளை சிவனுக்கு திருமணம் செய்விக்க தேவர்கள் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். அப்படியா! அந்தச் சிவனுக்கு திருமணமா? அதற்கு முன் நான் அங்கு சென்று அந்த பெண்ணைச் சிறை எடுத்து வருகிறேன் என்று கூறிச் சென்றான். குறிஞ்சி மலைக்காட்டில் இன்றுடன் பதினாறு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது என்ற பெருமகிழ்ச்சியுடன் அவளை மணம் செய்யப்போகும் களிப்பில் மிக்கிருந்தார் சிவன். அப்பொழுது நாரதர் சேவல் அவதாரம் எடுத்து குறிஞ்சி மலைக்காட்டில் கூவினார். இச்சத்தத்தைக் கேட்ட பார்வதி, விடியும் முன் இரவு பன்னிரண்டு மணிக்கு திருமணம் செய்வேன் என்று கூறிய சிவன் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று கோபத்துடன் காட்டை விட்டு வெளியேற எண்ணி வழிப்பயணம் மேற் கொண்டாள். அந்த வழியாக வந்த தரிகாசுரன் இவ்வளவு அழகு நிறைந்த பெண்ணைப் பார்த்ததில்லை‟ என்று கூறிப் பார்வதியை நெருங்கி வந்தான். பார்வதி கோபமடைந்து தரிகாசுரனைப் பார்த்து, டேய் மதிகெட்ட அரக்கா! நீ பெற்ற வரத்தை நினைத்துப் பார் என்று கூறினாள். அரக்கன் பார்வதியின் வார்த்தைகளைக் கருத்தில் கொள்ளாமல் மேலும் அவளை நெருங்கினான். பார்வதி கோபத்தின் உச்சத்திற்குச் சென்று தனது சூலத்தால் தரிகாசுரனைக் குத்தினாள். அரக்கனின் உடலில் இருந்து ரத்தம் வெளியே வந்தது. ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் ஒவ்வொரு அரக்கன் உருவானான். இதைப் பார்த்த பார்வதி காட்டேரியாக அவதாரம் எடுத்து அரக்கன் உடலில் உள்ள எல்லா ரத்தத்தையும் குடித்து தரிகாசுரனின் தலைகளை மாலையாக அணிந்து உடல்களை ஆடையாக அணிந்து "ஓம் காளியாக‟ விஸ்வரூபம் எடுத்து நின்றாள். இதனால் பூமி அதிர்ந்து பூமியின் பாரம் தாங்காமல் பூமாதேவி பூமியை விட்டு வெளியே வந்தாள். அதைப் பார்த்த நாகசக்தி, பூமாதேவிக்கு கொடையாக மாறி "ஓம் காளியாக‟ நின்ற அம்மனை ஆராதனை செய்தார்.  தேவர்களும், "அன்னையே போற்றி! அய்யனே போற்றி!‟ என்று போற்றினார்கள். காளியும் தன்னுடைய நெற்றிக்கண்ணைச் சிவனுக்குக் கொடுத்து சாந்தமாகக் காட்சி தந்தாள். அந்த „ஓம் காளி‟ தான் பத்திரகாளி என்று மடப்புரம் பகுதி மக்களாகிய நாங்கள் அம்மனை வழிபட்டு வருகின்றோம்.

பத்திரகாளி அம்மனின் தோற்றம்: மடப்புரத்தில் தீமையை அழிப்பவளாக பத்திரகாளியம்மன் காட்சி தருகிறாள். கீழ்த்திசையை நோக்கித் திரிசூலத்தைக் கீழ் நோக்கிப் பற்றி கலியுலகத்தில் அநீதிகளை அழிக்கும் அம்மன் தனது தலையில் சுடர்விடும் அக்கினியைக் கிரீடமாகக் கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள். வலக்கையில் பற்றிய திரிசூலம் அநீதியை அழிப்பதன் அடையாளமாகவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை  மீண்டும் எழவிடாது சாம்பலாக்கும் என்றும் கூறப்படுகிறது. அம்மனின் நின்ற நிலை தன்னை நாடி வரும் தன் மக்களை என்றும் எப்போதும் காத்து வரும் ஆயத்த நிலையை உணர்த்துகிறது. 

கோவிலின் சிறப்புகள்: 

தலத்தின் பெருமைகள்: அம்மனுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்டமான குதிரை வாகனம் காணப்டுகின்றது. இக்கோவிலின் சன்னிதியில் அய்யனார் குதிரை மீது அமர்ந்துதிருக்கின்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவிலாக மடப்புரம் கோவில் மதிக்கப்படுகிறது. 

தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோவிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் "மடப்புரம் காளி‟ என்ற வார்த்தையைக் கேட்டாலே கொடியவர்களும் நடுங்குவர் என்று நம்பப்படுகிறது. இதனால் மடப்புரம் வட்டாரத்தில் இக்காளி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றுத் திகழ்கின்றது.

கோவிலின் பழைமை: மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் ஐந்நூறு முதல் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பழைமையான கோவிலாக உள்ளது என்பது எங்களுடைய முன்னோர்களின் வழியாக அறியப்பட்ட செய்தியாக உள்ளது. 

கோவில் அமைவிடம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலிருந்து பூவந்தி செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது மடப்புரம். இங்கு வளைந்தோடும் வைகையின் விளிம்பில் உக்ரத்தின் அவதாரமாக நிற்கிறாள் பத்திரகாளி. இந்து சமய அறநிலையதத் துறையின் கட்டுப்பாட்டில் இக்காளி கோவில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கோவிலின் அமைப்பு: இக்கோவிலின் ராஜகோபுரம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. பதின்மூன்று அடி உயரமுள்ள பத்திரகாளியம்மனுக்கு அய்யனாரும் அவரின் குதிரையும் பாதுகாவலுக்கு உள்ளன. ஆறு அடி அகலம் கொண்டதாக அம்மனின் சிலை காணப்படுகின்றது. இக்கோவில் சுமார் 55 அடி அகலமும், 70 அடி நீளமும் கொண்டு அமைந்துள்ளது.

கோவிலின் சிறப்பம்சம்: இங்கு அக்கினியையே கிரீடமாகக் கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள் பத்திரகாளி அம்மன்.

பிடி மண்: மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து பிடிமண் எடுக்கப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்தில், சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள பனையூர் என்ற கிராமத்தின் ஒரு பகுதியில் பத்திரகாளி கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். அருகில் உள்ள மக்களும், தொலைவில் உள்ள மக்களும் வழிபடும் கோவிலாக உள்ளது. மக்களின் குறைகளை நீக்கும் கோவிலாக நம்பப்படுகிறது. ஏராளமான எங்கள் கிராம மக்கள் கோவிலில் உள்ள பத்திரகாளியம்மனை மனம் உருகி வேண்டிக் கொள்கின்றனர்.

அம்மனின் சக்திகள்:

அம்மன் தொடர்பான நம்பிக்கைகள்: செய்வினை, பில்லி, சூனியம் அகற்றி பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் எங்கள் பகுதி மக்களிடையே பத்திரகாளியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றவராகத் திகழ்கின்றார்.

உக்ர அவதாரமாக காணப்படும் பத்திரகாளியம்மன்: பத்திரகாளியம்மன் உக்ர அவதாரமாகத் திகழ்பவர். பத்திரகாளியம்மனை வணங்கினால் நீதிமன்றம் சம்பந்த பட்ட வழக்கு விசாரணைகளில் கூட எளிதில் வெற்றி கிடைக்கிறது என்றும், வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைத்து செழித்து வாழ முடியும் என்றும், மடப்புரம் பத்திரகாளியம்மன் பல்வேறு வகையான பிரச்சனைகளில் இருந்தும் விடுவிப்பதாக மடப்புரம் பகுதி மக்களாகிய நாங்கள் நம்புகின்றோம்.

குறைகளைத் தீர்க்கும் அம்மன்: அம்மனை மனத்தினுள் எண்ணி வழிபடும்போது தங்களுடன் பேசி எங்களுடைய குறைகளை, கவலைகளை அறிந்து அதனை தீர்க்க வழி சொல்வதாகவும், அம்மனே அவற்றைத் தீர்ப்பதாகவும் எங்களிடம் நம்பிக்கைகள் உள்ளது. இந்த அன்னைக்கு, வானமே கூரை! பிரம்மாண்ட குதிரையின் நிழலில் அவள் வீற்றிருக்கிறாள். தீராத பிரச்சினை எதுவென்றாலும் இந்த அன்னையின் முன்பாக நின்று கொண்டு, அந்த தெய்வத்தின் முகத்தைப் பார்த்து கைகூப்பி, மனம் உருகி வேண்டினால் அந்த தெய்வம் மானசீகமாக பேசுவதாக நாங்கள் நம்புகிறோம். யாராவது நம்பிக்கை துரோகம் செய்தால், அன்னைக்கு அருகில் உள்ள சத்தியக்கல்லில் சத்தியம் செய்தால், துரோகம் நினைப்பவர்களை முப்பது நாளில் தன் காலில் விழச்செய்யும் சக்தி பெற்றவளாக பத்திரகாளியம்மன் திகழ்கிறாள். கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள் அம்மனை நின்ற இடத்திலே இருந்து வேண்டிக் கொண்டாலே மனம் இரங்கி அருள் புரியக்கூடிய சிறப்பு மிக்கவளாக பத்திரகாளி அம்மன் திகழ்கின்றாள்.

நீதிமன்றமாகக் கருதப்படும் பத்திரகாளியம்மன் கோவில்: மடப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களாகிய எங்களில் யாருக்காவது கொடுக்கல், வாங்கல் பிரச்சினை என்றால் பெரும்பாலும் நீதிமன்றத்திற்கோ, காவல் நிலையத்திற்கோ நாங்கள் செல்வதில்லை. நாங்கள் நாடிச் செல்லுகின்ற நீதிமன்றமாக பத்திரகாளி கோவில் திகழ்கிறது. காளிக்கு வலப்புறத்தில் சிறியதாக ஒரு திண்ணை இருக்கும். இதன் பெயர் சத்தியக்கல். இரண்டு நபர்களுக்கிடையே பிரச்சினை என்றால், இந்தத் திண்ணையில் இருவரும் சூடத்தை ஏற்றி அணைத்து நாங்கள் தப்புச் செய்யவில்லை என சத்தியம் செய்வர். பின்னர் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு காளிக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடித்தபடி நாங்கள் தப்புச் செய்யவில்லை என வாக்குக் கொடுப்பர். இதில் யாராவது பொய்ச் சத்தியம் செய்தால் முப்பது நாட்களுக்குள்ளாக அந்த நபரை பத்திரகாளி குறைகேட்டுவிடுவதாக மடப்புரம் பகுதி மக்களாகிய எங்களால் நம்பப் படுகிறது. சில நேரம் பொய்ச் சத்தியம் செய்தவர்கள் மடப்புரத்து எல்லையைத் தாண்டுவதற்குள்ளாகவே காளியால் தண்டிக்கப்படுவதும் உண்டு. இப்படித் தண்டிக்கப்படுபவர்கள் மறுபடியும் காளியிடம் வந்து காணிக்கை செலுத்திப் பரிகாரம் தேடிக்கொண்டு செல்வர். பத்திரகாளி அம்மனின் சிலைக்குப் பின்னால் உள்ள பிரகாரத்தில் வேப்பமரம் ஒன்று உண்டு. இந்த வேப்ப மரத்திற்கும் தெய்வசக்தி இருப்பதாக நம்புகின்றோம். நீண்டநாட்களாகத் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்கள் இந்த மரத்தின் மடியில் மஞ்சள் தாலியைக் கட்டி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குவதாகவும், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் தங்களின் முந்தானையைக் கிழித்து வேப்பமரக்கிளையில் தொட்டில் கட்டிவிட்டால் தாமதிக்காமல் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் எங்கள் பகுதி மக்களிடையே மிகுதியான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. வேப்பமரத்தில் கட்டப்பட்டுள்ள தாலி மற்றும் தொட்டில்களின் எண்ணிக்கை மக்களின் ஆழமான நம்பிக்கையைப் பறைசாற்றும் விதத்தில் திகழ்கிறது. கோரிக்கைகள் நிறைவேறியதும் அம்மனுக்குப் புத்தாடை அணிவித்து எங்கள் பகுதி மக்கள் நன்றி செலுத்துவர்.

அம்மனுக்குக் காசு வெட்டிப் போடுதல்: பத்திரகாளியம்மன் கோவிலில் நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது. காளியின் முகத்துக்கு எதிரே தரையில் ஒரு பட்டியக்கல் பதித்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பக்கத்திலேயே உளியும் சுத்தியலும் வைத்திருக்கிறார்கள். அநியாயம் செய்பவர்களைத் தட்டிக்கேட்க சக்தி இல்லாதவர்கள் ஈரத்துணியுடன் கோவிலுக்கு வந்து காளிக்கு எதிரே உட்கார்ந்து காசை வெட்டிப் போட்டு, அவர்களை எதிர்த்துக் கேட்க எனக்குச் சக்தியில்லை, நீதான் எனக்குக் கேட்டுக் கொடுக்கணும் என்று கண்ணீரும் கம்பலையுமாக முறையிடுவர். இந்தக் கண்ணீருக்கு மனமிரங்கிவரும் காளி, அநியாயக்காரர்களை அடித்து எழுப்பி இம்சை செய்து அவர்களையும் தன்னுடைய வாசலுக்கு வரவழைத்து விடுகிறாள். அதுபோல் நல்லவர்களுக்கு தீங்கு செய்ய காசை வெட்டிப் போட்டால் அப்படிப் போட்டவர்களுக்கே அந்த காளி அம்மன் பாதகத்தைக் கொடுத்து விடுவாள். உண்மைக்கும் நேர்மைக்கும் தான் தெய்வம் துணை இருக்கும் என்பதை பத்திரகாளியம்மனின் சிறப்பினை பறைசாற்றுகிறது.

கோவில் திருவிழாக்கள்: 

ஆடிவெள்ளி: ஆடி வெள்ளிக்கிழமைகளில் பத்திரகாளி  அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். இந்நாட்களில் அம்மனுக்குப் பொங்கல் வைத்தும், பாலபிஷேகம் செய்தும் எங்கள் பகுதி மக்கள் வழிபாடு செய்கின்றனர். தட்சணாயள புண்ணிய காலம் என்பது ஆடி மாதத்தில் தொடங்குகிறது. இம்மாதத்தில் தான் பத்திரகாளி அம்மன் அவதரித்ததாக மடப்புரம் பகுதி மக்களாகிய நாங்கள் கருதுகின்றோம். ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்கள் மடப்புரம் காளி கோவிலில் சிறப்பிற்குரிய நாட்களாகக் காணப்படும். இந்த மூன்று நாட்களிலும் அம்மனுக்குப் படையல் வைத்து வழிபடுவோம். கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு குளிர்ச்சியைத் தணிக்க எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுவது எங்களுடைய வழக்கமாக உள்ளது. காரணம் -  அம்மனின் கடுங்கோபத்தைத் தணிப்பதற்காக எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுகிறோம். எலுமிச்சையில் விளக்கேற்றியும் அம்மனை மக்கள் வழிபடுவர். பக்தர்களின் வசதிக்காக மதுரை, மானாமதுரை, சிவகங்கையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆடி ஞாயிற்றுக் கிழமைகளில் பத்திரகாளி அம்மன் கோவிலில் கூழ் ஊற்றி வழிபடுவது சிறப்பம்சமாகும்.

நவராத்திரி: சிவனின் மனைவியான பார்வதியே காளி வடிவானவள் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளதால் சிவராத்திரித் திருவிழா எங்களுடைய கோவிலில் மிகவும் விமரிசையாக மக்களால் கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புதுப்பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு, அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு, மக்களால் பூசை செய்யப்பட்டு, பின்பு கோவிலுக்கு அம்மனை வழிபட வந்த மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று இரவு முழுவதும் மக்கள் உறங்காமல் கண் விழித்து அம்மன் முன் அமர்ந்திருப்பர். காரணம் தங்களுடைய மனத்தினில் உள்ள குறைகளை, கவலைகளை அம்மன் களைந்துவிடுவாள் என்று மடப்புரம் பகுதி மக்களிடம் நம்பிக்கைகள் உள்ளது.

கும்ப விழா: மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மடப்புரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும். மேலும் இந்த கும்பவிழா மூன்று நாட்கள் நடைபெறும். ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பத்திரகாளியம்மனை வழிபடுகின்றனர். விடிய விடியத் திருவிழா நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மடப்புரம் பகுதி மக்கள்கள் மட்டுமல்லாமல் பகுதியைச் சுற்றியிருக்கும் மற்ற ஊர் மக்கள் என அனைவரும் ஆரவாரத்துடன் அம்மனை வழிபடுவர். இந்த கும்பவிழா மடப்புரத்தில் கொண்டாடப்படும் தனித்துவமான ஒரு விழாவாகும்.

வைகாசிப் பொங்கல்: வைகாசி மாதம் முழுவதும் ஸ்ரீ பத்திரகாளியம்மனின் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து மக்கள் வழிபடுவர். இந்த வழிபாடு அம்மனுக்குச் செய்யும் நேர்த்திக்கடனாகக் கருதப்படுகிறது. தாங்கள் நினைத்த காரியம் நடந்ததற்கு காரணம் அம்மன் என நாங்கள் நம்புகின்றோம். 

மாவிளக்கு எடுத்தல்: பத்திரகாளியம்மனுக்கு மாவிளக்கு எடுக்கப்படும். பெண்கள் அனைவரும் தங்களுடைய மாவிளக்குப் பானையை அலங்கரிப்பர். அந்த மாவிளக்கு பானையைச் சுற்றி பூக்களை சுற்றுவர். மாவின் நடுவில் விளக்கு வைப்பர். அதன் இடையில் திரியிட்டு விளக்கை ஏற்றுவர். அந்த மாவைச் சுற்றி மூன்று வெற்றிலை, மூன்று ஆமணக்கு முத்து, வேப்பிலை, வாழைப்பழம், தேங்காய் போன்றவை வைக்கப்பட்டு இருக்கும். பிறகு ஒலிபெருக்கியில் பெண்கள் அனைவரும் தங்களது மாவிளக்கு பானையைத் தூக்கி வருமாறு அறிவிப்பு தெரிவிப்பர். பின்பு ஊர் பெரியவர்கள் அனைவரும் தெருத் தெருவாக வந்து அழைப்பர். பிறகு ஒவ்வொருவரும் தங்களது மாவிளக்குப் பானையை சாமிமுன் வரிசையாக வைப்பர். மாவிளக்குக்கு அபிஷேகம் செய்யப்படும். தங்கள் வீட்டில் செய்த அந்த மாவை சிறிது கோவிலுக்கு வழங்குவர். அந்த மாவில் ஏற்றப்பட்டிருக்கும் விளக்கினை அணையாமல் பார்த்துக் கொள்வர். பூசை முடிந்ததும் மடப்புரம் பகுதி மக்கள் அவரவர் வீட்டிற்கு தங்களது மாவிளக்குப் பானையைத் தூக்கிசெல்வர்.

வயிற்றில் மாவிளக்கு எடுத்தல்: மாவிளக்குக்கு அபிஷேகம் செய்யும் போது நேர்த்திக்கடன் செய்யும் நபர் தங்களது நேர்த்திக்கடனைச் செய்வர். நேர்த்திக்கடன் செய்யும் நபர் அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடுவர். பின்பு அம்மன் சன்னதி முன் கிடந்த நிலையில் படுத்துக் கொள்வர். பின்பு அவர்கள் மேல ; மாவை வைத்து அதன் மேல் விளக்கு ஏற்றுவர். அவர்கள் கையில் வேப்பிலை தருவர். அவர்களுக்கு சாமி இறக்குவர். சிறிது நேரத்தில் அந்த மாவிளக்கை எடுத்துக் கண், வயிறு, கால் பாதங ;களில் வைத்து எடுப்பர். பிறகு எழுந்து அந்த மாவைக் கோவிலில் வைப்பர். பிறகு அவர்களுக்கு பூசாரி திருநீறு வழங்குவார். இவ்வாறு தங்களது நேர்த்திக் கடனை மடப்புரம் பகுதி மக்கள் செலுத்துவர்.

சாமியாட்டம்: சாமியாடுதல் என்பது கிராமங்களில் காணப்படும் ஒருவித வழிபாட்டு முறையாகும். குறிப்பிட்ட சிறு மற்றும் பெருந்தெய்வம் ஒன்று சக்தி ஒருவர் மீது ஆட்கொள்ளப்படுவதாக இம்முறை கருதப்படுகிறது. அவ்வாறு சக்தியேறப் பெற்றவர் அருளாடி அல்லது சாமியாடி என்று அழைக்கப்படுவர். அம்மனுக்குச் செய்யும் அலங்கார, அர்ச்சனைகளை சாமியாடிக்கும் செய்வர். இயற்கையாகவே சிலருக்கு சாமி இரங்கி அருள்வாக்கு கூறுவது உண்டு. காலம் காலமாகச் சில வம்சங்களில் உள்ளவர்கள் மட்டுமே அம்மனின் அருள் பெற்று சாமியாடுவர். அப்படி அவர்களுக்கு சாமி இறங்கவில்லை எனில் அம்மனின் முன்பு அவர்களுக்கு அருள் இறக்கப்படும். இந்த அருள் இறக்கப்படுவது பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெறுவது வழக்கம். அடிமுறை என்று அழைக்கப்படும் களரி, நெடுங்காலமாக தமிழர் பயின்று வந்த தற்காப்புக் கலைகளில்  ஒன்று. ஆரம்ப காலங்களில் சாமியாடிகள் கூடி களரி எனும் சாமி ஆடுவது வழக்கமாக இருந்தது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை
    அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை
    அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை
    அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை
    அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை
    அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை

TEMPLES

    எமதர்மராஜா கோயில்     பிரம்மன் கோயில்
    நட்சத்திர கோயில்     அறுபடைவீடு
    சேக்கிழார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    விநாயகர் கோயில்     ஐயப்பன் கோயில்
    சடையப்பர் கோயில்     வள்ளலார் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    விஷ்ணு கோயில்     சித்தர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     சிவாலயம்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சிவன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்