LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மாம்பழத்திலிருந்து தோல் பொருட்கள் தயாரிப்பு. சென்னை விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியே நீண்ட நாளுக்குப் பொருட்களைத் தயாரிக்க முடியாது. ஏனென்றால் ஒரு கட்டத்தில் அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்து சாமானிய மக்களால் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
***********************************
இதனைக் கருத்தில் இயற்கைப் பொருளுக்கு மாற்றாகப் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாகச் சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் தற்போது அதிகளவில் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
*********************
தொழில்நுட்ப உரிமை வழங்கியுள்ளது
*************************
உதாரணமாக ஆடு, மாடுகள் போன்ற விலங்குகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படும் தோல் பொருட்களைச் சொல்லலாம். இயற்கை தோலுக்குத் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகம் போன்ற காரணங்களால் செயற்கை தோலை விஞ்ஞானிகள் உருவாக்கினர். தற்போது செயற்கை தோலுக்கு மாற்றாக மாம்பழக் கூழை பயன்படுத்தித் தோல் பொருட்களைச் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
***********************
சென்னையில் செயல்படும் மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனம், மாம்பழக் கூழை பயன்படுத்தித் தோல் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. மும்பை தளமாக கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான அமாதி கிரீன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு இதற்கான தொழில்நுட்ப உரிமை வழங்கியுள்ளது.
*****************************
மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பி.தணிகைவேலன் கூறுகையில், மாம்பழக் கூழுடன் பயோபாலிமர்-ஐ திரவ அல்லது தூள் வடிவில் கலக்கப்படுகிறது. பின்னர் அது ஒரு எளிய முறையின் மூலம் தாள் போன்ற பொருளாக மாற்றப்படும். பின்பு அதற்கு மேற்பரப்பு பூச்சு மற்றும் அலங்கார வடிவங்கள் சேர்க்கப்படும்.
**************************
திரவ அல்லது தூள் வடிவில் கலக்கப்படுகிறது
***********************
சென்னையில் செயல்படும் மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனம், மாம்பழக் கூழை பயன்படுத்தித் தோல் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. மும்பை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான அமாதி கிரீன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு இதற்கான தொழில்நுட்ப உரிமை வழங்கியுள்ளது. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பி.தணிகைவேலன் கூறுகையில், மாம்பழக் கூழுடன் பயோபாலிமர்-ஐ திரவ அல்லது தூள் வடிவில் கலக்கப்படுகிறது. பின்னர் அது ஓர் எளிய முறையின் மூலம் தாள் போன்ற பொருளாக மாற்றப்படும். பின்பு அதற்கு மேற்பரப்பு பூச்சு மற்றும் அலங்கார வடிவங்கள் சேர்க்கப்படும். இதனைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட மேங்கோ லெதர் பைகள் மற்றும் லேப்டாப் பைகள் ஆயுள் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளன. தற்போது காலணிகளில் பயன்படுத்தும் வகையில் இந்தப் பொருளின் சிறப்பு இயல்புகளை மேம்படுத்துவதற்கான பணிகள் செய்யப்படுகிறது.
*******************************
இழுவிசை வலிமை மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் இயற்கையான தோலுடன் போட்டியிடக்கூடிய பொருள் எதுவும் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக சந்தையில் இருக்கும் பி.வி.சி. மற்றும் பி.யு. போன்ற செயற்கை தோலால் செய்யப்பட்ட பொருட்களை வேண்டாம் என்றும் குப்பையில் போடும்போது, அவை மக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதேசமயம் நாங்கள் செய்தது, ஒரு இயற்கைப் பொருளை (மாம்பழக் கூழ்) சுற்றுச்சூழலுக்கு உகந்த பாலிமருடன் இணைத்து மக்கள் தோல் போன்ற பொருளை உருவாக்கியுள்ளோம்.
********************************
சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகள் மற்றும் பைகளை உருவாக்க புதுப்பாங்கு நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுடன் நாங்கள் ஒத்துழைப்போம்.
*******************************
இந்த பொருளை உற்பத்தி செய்வதற்கான செலவு செயற்கை தோலைக் காட்டிலும் 60 சதவீதம் குறைவாகும். தற்சமயம் உலக அளவில் மாம்பழத்தை அடிப்படையாகக் கொண்ட தோல் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனம் நெதர்லாந்தில் உள்ளது எனத் தெரிவித்தார்.
***************************
விவசாயிகளுக்குப் பெரிய வரப் பிரசாதம்
*********************************
சர்வதேச அளவில் மாம்பழ உற்பத்தியில் மிகப் பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. ஆண்டுக்குச் சுமார் 2 கோடி டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குப் பொருந்தாத காரணத்தால் இதில் 40 சதவீதம் வரை விளைநிலங்களிலேயே கழிக்கப்படுகின்றன. இது விவசாயிகளுக்குப் பெரிய வருமான இழப்பாகும். அதேசமயம் மாம்பழக் கூழை பயன்படுத்தித் தோல் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் இந்த புதிய தொழில்நுட்பம் முழு வீச்சில் பயன்பாட்டுக்கு வந்தால் விவசாயிகளுக்குப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கும்.

by Kumar   on 23 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.