LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருக்குறள் பரப்புவதில் அசத்திவரும் ஆரணி தமிழ் ஆசிரியை உமாராணி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் வி. ஏ. கே. நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி உமாராணி.

*****************************
தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். உமாராணி ஆரணி அடுத்த எஸ். வி. நகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.  இவர் தமிழ் மீது அதிகளவு பற்று கொண்டவர். கொரோனா காலத்தில் வீட்டில் ஓய்வு நேரத்தில் இருந்த போது கவிதை மற்றும் நூல்கள் எழுதி உள்ளார்.
************************************
இதனை தொடர்ந்து திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரி புதிய முயற்சியாக சோயாபீன்ஸ், அகல்விளக்கு கை வளையல், கழுத்தில் அணியும் மணி ரூபாய் நாணயம் மற்றும் குடைகளில் தேசிய கொடி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களில் 1, 330 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.
********************************
ஆல் இண்டியா புக்ஸ் ஆப் ரெக்கார்டு மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது நல்லாசிரியர் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட விருதுகளை தமிழ் ஆசிரியை உமாராணி பெற்றுள்ளார். மேலும் சாதனைகளை புரிந்த உமாராணியை பாண்டிச்சேரி கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் நேரில் அழைத்து கவுரவித்து பாராட்டினார்.
***********************************
இதே போல   அரசு பள்ளி மாணவ மாணவிகளையும் சாதனை புரிய வைக்க தமிழ் ஆசிரியை உமாராணி புதிய முயற்சி மேற்கொண்டுமுயற்சி செய்து வருகின்றார்.

உலக பொதுமறை நூல் “திருக்குறள்”. வாழ்வியல் நெறிகளை கொண்டது. 133 அதிகாரங்களில் உள்ள 1,330 திருக்குறளிடம் சரணாகதி அடையாத ‘மானிடர்கள்’ இல்லை என்றே கூறலாம். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என உலகெங்கும் திருக்குறள் பற்றாளர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும், தங்கள் ரசனைக்கு ஏற்ப திருக்குறளை ரசிக்கின்றனர். இந்த வரிசையில் குடை, காய்கனிகள், அகல் விளக்கு, மணி, நாணயம், மற்றும் பட்ஸ் (காது சுத்தம் செய்வது) ஆகியவற்றில் ‘திருக்குற(ள்)ளை’ எழுதி, தன்னுடைய ஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியை உமாராணி.

இனம்புரியாத பேரானந்தம் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக உமா ராணி பணியாற்றி வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பித்து வரும் ஆசிரியை உமாராணி, தன்னுடைய வாழ்வில் கரோனா ஊடரங்கு காலம் திருப்புமுனையை ஏற்படுத்தியது என அக மகிழ்வுடன் கூறுகிறார்.

மகள்களின் ஊக்கம்... மேலும் அவர் கூறும்போது, “மாணவர்களுக்கு பாடம் கற்பித்து, நல்வழிப்படுத்தும் பணியில் கடந்த 25 ஆண்டுகளாக பயணிக்கிறேன். கரோனா ஊரடங்கு காலத்தில், திருக்குறள் மீதான பற்று காரணமாக படிக்க தொடங்கினேன். என்னுடைய ஆழ்மனதில் இனம்புரியாத பேரானந்தம் ஏற்பட்டது. எனது வாழ்நாளிலும், திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் வகையில், என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தேன்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் 1,330 திருக்குறளை எழுதி, அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்தேன். இதற்காக, எனக்கு தெரிந்த வழிமுறையில், எனது பணியை தொடங்கினேன். குடை, பீன்ஸ் விதை, அகல் விளக்கு, சிறிய மணியில் 1,330 திருக்குறளை எழுதும் பணியை தொடங்கினேன்.

என்னுடைய முயற்சிக்கு எனது மகள்கள் பவித்ரா, ரோஜா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். என்னுடைய ஆற்றல் மங்கிவிடக் கூடாது எனக் கூறி, எனது மகள்கள் அளித்த ஊக்கம், திருக்குறளுடனான உன்னத பயணம் செம்மையாக தொடர்கிறது. முதற்கட்ட முயற்சியுடன் திருக்குறள் எழுதும் பணியை முடித்து கொள்ளாமல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தேன்.

ஒரு சிறிய குடையில் திருக்குறளை எழுதியுள்ளேன்

திருக்குறளை தேசிய நூலாக... திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தேசிய கொடியின் பின் பகுதியிலும், ரூபாய் நாணயத்தை விட திருக்குறள் முக்கியம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு ரூபாய் நாணயம் மீதும், செவிக்கு கொண்டு செல்ல வேண்டும் என பட்ஸ்-ல் திருக்குறளை எழுதியுள்ளேன். மேலும், ரயில் பயணத்தின் போது, ஒரு சிறிய குடையில், மனித வாழ்வியல் நெறிமுறைகளுடன் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரின் பெயரை 3,800 முறை எழுதியுள்ளேன். திருக்குறள் மீதான உன்னத பயணம், என்னுடன் முடிந்து விடக்கூடாது என்பதற்காக, என்னுடைய பள்ளி மாணவிகளையும் ஊக்கப்படுத்தினேன்.

ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்

எனது பணியை முன்மாதிரியாக கொண்டு 20 மாணவிகள் களத்தில் உள்ளனர். முருங்கைக்காய், மஞ்சள், வேதியியல் ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் டெஸ்ட் டியூப், ரிப்பன் போன்றவற்றில் 1,330 திருக்குறளை எழுத தொடங்கினர். அவர்களது வெற்றி பயணம், சாதனை பயணமாக தொடர்கிறது. என்னுடைய பணியை அங்கீகரித்து, ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட அமைப்புகள், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தன. மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழசை சவுந்தர்ராஜனும் நேரில் வரவழைத்து பாராட்டினார்.

அகத்தூய்மையும், மகிழ்ச்சியும்... கல்வி, பணி, பணம், குடும்பம் என குதிரைக்கு கடிவாளம் போட்டதுபோல் மனிதர்களின் வாழ்வியல் பயணம் தொடர்கிறது. ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கை, உடல் நலம் முக்கியமானது. சுவர் இருந்தால்தான், சித்திரம் வரைய முடியும் என்பார்கள்.

மாணவ செல்வங்களை வழிநடத்தி வருகிறேன்

‘வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்’ என்ற திருக்குறளுக்கு ஏற்ப நமது அகம் தூய்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ‘முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு’ என்ற திருக்குறள், இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல, ஒருவரை இதயப்பூர்வமாக நேசிப்பதே உண்மையான நட்பாகும் என கூறுகிறது.

‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ எனும் திருக்குறள், ஒருவர் நமக்கு செய்த உதவியை மறப்பது அறம் அன்று, அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம் என்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் அகத்தூய்மை, மனதில் உன்னதமான மகிழ்ச்சி இருந்தால் வாழ்வில் சாதிக்கலாம். இக்குறளை மேற்கோள்காட்டி, என்னுடைய மாணவ செல்வங்களை வழிநடத்தி வருகிறேன். அவர்களும், என்னுடன் இணைந்து பயணிக் கின்றனர்” என்றார்.

by Kumar   on 11 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.