வரைவு இலா மாண் இழையார் மெல்தோள்- உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் வேறுபாடு பற்றி ஒருவரையும் விலக்காது பொருள் கொடுத்தார் யாவரையுந் தழுவும் விலைமகளிரின் மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு-அக்குற்றத்தை யறியும் உயர்வில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகாம். 'மாணிழையார்' சிறந்த அணிகல மணிந்த பெண்டிர்.இதனால் ஒப்பனையும் 'மென்றோள்' என்பதனால் உருவ அழகும் அறியப்படும். "புரையுயர் வாகும்" (தொல்.785), அளறு போல் துன்பந் தருவதை 'அளறு' என்றும் , விலைமகளிரொடு கூடின கீழ்மக்கள் அவரை ஒருகாலும் விடார் என்பது தோன்ற 'ஆழும்' என்றும், கூறினர்.
கலைஞர் உரை:
விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் நரகம் எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
வேறு குற்றம் செய்யாமலும் வெறும் முட்டாள் தனத்தினால் விழுந்து தவிக்கிற நரகம் எதுவென்றால், பணங் கொடுக்கிற யாரையும் வரன்முறையில்லாமல் புணர்கின்ற விலை மாதரின் உறவேயாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள், அக்குற்றத்தினை அறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகமாகும்.
Translation
The wanton's tender arm, with gleaming jewels decked,
Is hell, where sink degraded souls of men abject.
Explanation
The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base